• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைன் மீதான வெற்றிக்கு பிறகு ரஷ்யாவின் இலக்கு இந்த நாடு

உக்ரைன் மீது ரஷ்யா வெற்றியை பதிவு செய்தால், அதன் பின்னர் பால்டிக் நாடுகள் மீது விளாடிமிர் புடின் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை வரும் என தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் வீழ்ந்தால் ரஷ்யாவுடன் நேட்டோவின் கிழக்குப் பகுதி கடுமையான ஆபத்தில் சிக்கும் என்றே நிபுணர்கள் கருத்தாக உள்ளது.
  
மேலும், புதுப்பிக்கப்பட்ட மற்றும் அதிகரித்த அமெரிக்க உதவி மட்டுமே முன்வரிசை சரிவைத் தடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர். ஆனால் ரஷ்யாவின் இந்த திட்டமானது பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற முக்கிய நேட்டோ நட்பு நாடுகளுக்கு முடிவெடுக்கும் அவகாசத்தை அளிக்காது என்றே நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

அமெரிக்காவின் உதவி இன்றி, இனி உக்ரைனால் தொடர முடியாத சூழல். அமெரிக்காவின் கவனம் இஸ்ரேல் மீது திரும்பிய பின்னரே ரஷ்யா முன்னேறத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 360 சதுர கிலோமீட்டருக்கு மேல் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply