• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எல்ல, கரந்தகொல்ல மண்சரிவு அபாயத்தை கட்டுப்படுத்த முடியும்

இலங்கை

“பதுளை – எல்ல, கரந்தகொல்ல மண்சரிவு அபாயத்தை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்த முடியும்” என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.

எல்ல – கரந்தகொல்ல, மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு அபாயத்தை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் பதுளை மாவட்ட அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் அங்கு சென்றிருந்தனர்.

அங்கு நிலவரத்தை கண்காணித்த அவர்கள், நிலச்சரிவு அபாயத்தை குறைக்கும் வகையில், நீர் பாய்ச்சலை திசை திருப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர். இது ஒரு தற்காலிக தீர்வு எனவும், நிலைமையை கண்காணிக்க மற்றுமொரு நிபுணர் குழு அங்கு வரவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு புவியியலாளர் குழுவினர்  நேற்று அப்பகுதிக்குச் சென்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதையடுத்து, மண்சரிவு அபாயம் உமா ஓயா திட்டத்தின் விளைவா? இல்லையா? என்பதை கண்டறியும் தொழில்நுட்ப உபகரணங்களை அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply