• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிழக்கை மீட்க TMVP கட்சியுடன் கரம் கோர்க்க வாருங்கள்

இலங்கை

”தமிழரசுக் கட்சி சின்னா பின்னமாகி விட்டது. இனி அதனைக் கட்டியெழுப்பு முடியாது என்கின்ற நம்பிக்கை மக்களுக்கும் வந்துவிட்டது. எனவே கிழக்கை மீட்க தமிழரசு கட்சி ஆதரவாளர்கள் TMVP கட்சியுடன் கைகோர்க்க முன்வரவேண்டும்” என அக் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் அறை கூவல் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு கொம்மாந்துறை மைதானத்தில் இடம்பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கிழக்கு மாகணத்தில் நீண்ட வரலாற்றில் தனித்துவத்தையும் கிழக்கு மாகாண மக்களின் அடையாளமாக மாறிவருகின்றது.

எங்களுடைய விருச்சம் முழு பிராந்தியத்தையும் ஆண்டு கொண்டு இருக்கின்றது என்பதுடன் அது அகலகால் வைப்பதற்கு கட்சி முனைகின்றது என்பதை நீங்கள் சிந்தித்து எமது கட்சியுடன் கரம் கோர்த்து செயற்படுங்கள்.

கிழக்கு மாகாணத்தில் எந்த விதமான தீர்மானங்கள் வந்தாலும் எப்படியான அரசியல் பின்னணி வந்தாலும் பேரம் பேசுகின்ற சக்தியாக எமது கட்சியை யாரும் தவிர்த்துவிட்டு கடந்து செல்ல முடியாது. ஆகவே நாங்கள் ஒன்றுபட்ட சக்தியாக கிழக்கு மாகாணத்தில் ஒரு பெரும் விருட்சமாக வளர்வதை உங்கள் கரங்களையும் ஆலோசனைகளையும் குழந்தைகளையும் கட்சியில் இணைக்க வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்குமாகாண மக்களின் தலைவிதியை சரியான பாதையில் இட்டுச் செல்லும் இந்த படகு சின்னமும் படகும் உங்களை நிச்சயமாக சரியான இடத்தில் கொண்டு வழிசேர்க்கும். எனவே நீங்கள் தொடர்ந்தும் எங்களுடன் கரம் கோர்த்து செயல்படுங்கள்”இவ்வாறு சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply