• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு எட்டப்படும்

இலங்கை

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக மலையக ஒன்றியத்தின் தலைவர், வேலு குமார் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட மலையக ஒன்றியத்தின், முதலாவது கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சுஜித் சஞ்சய் பெரேரா மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோரும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளும், கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள தமிழ் தேசிய பாடசாலைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் தேசிய பாடசாலைகளில் தற்போது நிலவும் ஆசிரிய பற்றாக்குறைகள் மற்றும் பௌதீக வள குறைபாடுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கான தீர்வுகளை கல்வி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்தனர். இக்கலந்துரையாடலின் போது பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் உயர்தர வகுப்பிற்கான ஆசிரிய பற்றாக்குறை வெளிப்படுத்தப்பட்டது.

குறிப்பாக கணித, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் இந்த நிலைமை மிக மோசமாக உள்ளமை வெளிகொணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply