• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் ஜனநாயகத்தை நிலை நாட்டியது நாமே - ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிதான் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் இடம்பெற்ற மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய தேசிய கட்சி முடிவடைந்துவிட்டதாக பலரும் நினைத்தனர். ஐக்கிய தேசிய கட்சியை புதைக்க வேண்டம் என கூறினார்கள்.

மூழ்கிய பொருதாரத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டிய தேவையே எமக்கு இருந்தது.

ஐக்கிய தேசிய கட்சி முடிந்தாக கூறினாலும் தேவையான நேரத்தில் எழுந்து வந்தது ஐக்கிய தேசிய கட்சியே.
நாட்டின் நல்ல எதிர்காலம் ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதனால் வீழந்த நாட்டை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது.

இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து கட்சிகளும் பதாகைளை ஏந்தியவாறு பேரணியாக செல்வதை நான் அவதானித்தேன். இதுவே ஜனநாயகம்.

என்னை பலர் சர்வாதிகாரி என்கின்றார்கள். ஆனால் இன்று என்னைபோன்று ஏனையவர்களும் மே தினத்தை முன்னிட்டு பேரணிகளை கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலைமை கடந்த இரண்டு வருடங்களில் இருக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியபோது அடித்து விரட்டினார்கள்.

ஆனால் இன்று மக்களையும் அழைத்துக்கொண்டு சுதந்திரமாக பேரணியொன்றை நடத்துவதற்கு சரியான சூழலொன்றை நாம் அமைத்து கொடுத்து இருக்கின்றேன். இதுதான் ஜனநாயகம்.

நாட்டின் அரசியல் உடைந்து வீழ்ந்தமையினாலேயே நான் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் ஆகினேன்.
ஒரு அரசாங்கம் வீழ்ந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவரே அரசாங்கத்தை பொறுப்பேற்பார். ஆனால் எமது நாட்டில் எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சியும் பொறுப்பை ஏற்க பின்வாங்கின.

நான் யார் ஒரெயொரு தேசியப் பட்டியலினூடாக தனியாக வந்தவன். அனைவரும் ஓடியதால் நான் அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டேன்.

இந்த சமயத்தில், எமக்கு உதவி செய்த, ஏனைய கட்சிகளிலிருந்து எம்முடன் வந்து இணைந்துக்கொண்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. பாரிய சிரமத்துக்கு மத்தியிலேயே நாம் இன்று இந்த இடத்துக்கு வந்துள்ளோம்.

இந்த நிலைமையை நாம் பாதுகாக்க போகின்றோமா? அல்லது மீண்டும் 2022 க்கு போகப் போகின்றோமா?

நான் ஏனைய கட்சிகளிடமும், தற்போதைய நிலைமையை சீரழிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.

மக்களைப் பற்றிச் சந்தித்து அரசாங்கத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். நாட்டைப் பற்றி சிந்தியுங்கள்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

Leave a Reply