• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒன்ராறியோவில் அமுலுக்கு வரும் ஒற்றைக்கட்டண திட்டம்

கனடா

இன்று முதல் ஒன்ராறியோ பொதுப்போக்குவத்துச் சேவையில் 'ஒற்றைக்கட்டண' திட்டம் அமுலுக்கு வருகின்றது.

இன்று தொடக்கம் ரொறன்ரோ பொதுப்போக்குவரத்துச் சேவை (TTC) மற்றும் ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட இத்திட்டத்தில் பங்குபற்றும் அனைத்து சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இது பற்றி ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்கள் “ஒன்ராறியோ அரசானது, அனைத்து போக்குவரத்துப் பயணிகளுக்கும்  அவர்களின் சொந்தப் பணத்தை சேமித்து மீண்டும் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கின்றது" என கூறுகின்றார்.

மேலும்,  போக்குவரத்து இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் இதைப்பற்றிக் குறிப்பிடுகையில் "ஒற்றைக்கட்டணத் திட்டத்தின் மூலம் சராசரியாக ஆண்டிற்கு 1600 டொலர்களை ஒருவர் சேமிக்க முடிவதோடு, பயணச் சீட்டின் விலை காரணமாக மக்கள் இனி தமது வாழ்க்கையின் பெரும் தருணங்களையோ வேலை வாய்புகளையோ இழக்க நேரிடாது" என தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ அரசின் முழுமையான நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த 'ஒற்றைக்கட்டண' முறை ஆண்டொன்றுக்கு போக்குவரத்துத்துறையில் எட்டு மில்லியன் புதிய பயணங்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் ஒற்றைக்கட்டணத் திட்டத்தின் மூலம், 'கோ' (GO) போக்குவரத்துச் சேவை உட்பட பின்வரும் அனைத்து போக்குவரத்துச் சேவைகளுக்குமிடையில் பயணிக்கும் பயணிகள் ஒருமுறை மட்டுமே கட்டணம் செலுத்துவார்கள்:

Barrie Transit

Brampton Transit

Burlington Transit

Bradford West Gwillimbury Transit

Durham Region Transit

Grand River Transit

Guelph Transit

Hamilton Street Railway

Milton Transit

MiWay

Oakville Transit

TTC

York Region Transit


Facebook: https://www.facebook.com/reel/333495926320453 

Youtube: https://www.youtube.com/watch?v=ETLthZlEBxI&t=3s

Leave a Reply