கணவனை ரூ. 1.5 கோடிக்கு காதலிக்கே விற்ற மனைவி!
இலங்கை
சில சமயம் சினிமா பாணியில் வாழ்க்கையில்,சில உண்மை சம்பங்கங்கள் நடக்கத்தான் செய்கின்றது. அந்தவயைில்,மனைவி தனது கணவரை பணத்திற்காக அவருடைய காதலிக்கு விற்றுள்ள ஒரு சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வினோத சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் தான் நடந்துள்ளது.இது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் 42 வயது பெண் ஒருவர் 54 வயது நபரொருவரை காதலித்துவந்துள்ளார்.
இவர்களுக்கு இடையில் 12 வயது வித்தியாசம் இருப்பது பெரிய விடயம் கிடையாது. அதை விட முக்கியம் என்வென்றால், அந்த நபர் திருமணமானவர், அவருக்கு 16 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகள்களும் கூட இருக்கின்றார்கள்.
குறித்த நபர் மனைவிக்கு தெரியாமல் திருமணத்துக்கு புறப்பான உறவு வைத்திருப்பதை கண்டறிந்த பின்னர், குறித்த விவகாரத்தால், குடும்பத்தில் தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இது குழந்தைகளின் மனநலத்திலும் கல்வியிலும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியதால், இறுதியில், மனைவி குடும்ப நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது, நீதிமன்றம் கணவன் மனைவி இருவரையும் ஆலோசனைக்காக அழைத்தது.
அதன் போது, கணவர் தனது குழந்தைகளை நேசிப்பதாகவும், ஆனால் மனைவியுடன் வாழ விரும்பவில்லை என்றும் கூறினார். மனைவி தினமும் சண்டையிடுவதாகவும், இனி வீட்டிற்கு செல்ல விரும்பவில்லை என்றும் கூறியதுடன், மனைவியை பிரிந்து புதிய காதலியுடன் வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
நீதிமன்ற ஆலோசகர்கள் குறித்த தம்பதியினரை சமரசம் செய்ய முயன்றும் கணவர் அதற்கு உடன்படவில்லை, விவாகரத்துக்கு மனைவி உடன்படவில்லை. பல ஆலோசனை அமர்வுகளுக்குப் பிறகு, இந்த ஜோடி ஒரு உடன்பாட்டை எட்டியது.
குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புவதாக கூறிய நிலையில் மனைவி, 1.5 கோடி ரூபாய் சொத்து அல்லது ரொக்கம் கொடுத்தால் விவாகரத்திற்கு ஒப்புக்கொள்வதாக மனைவி தெரிவித்துள்ளார்.
கணவரின் காதலி இதை ஏற்றுக்கொண்ட நிலையில், ஒரு பிளாட்டையும், பணத்தையும் கொடுத்து காதலனை சொந்தமாக்கிக்கொண்டுள்ளார்.






















