சேயோனாக மிரட்டும் சிவகார்த்திகேயன் - SK26 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
சினிமா
கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதன்படி இந்தப் படத்திற்கு "சேயோன்" என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் "சேயோன்" படத்தின் கொண்டாட்டம் நாளை (பிப். 17) காலை 10 மணிக்கு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேயோன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சிவகார்த்திகேயன் கையில் அரிவாளுடன் மயில்களுக்கு மத்தியில் உட்கார்ந்து இருக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.























