• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனு தள்ளுபடி

இலங்கை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய பிரஜாவுரிமையை கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மூவரடங்கிய நீதியரசர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன தெரிவித்தார்.
 

Leave a Reply