• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் பச்சை மிளகாயின் விலை வீழ்ச்சி

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சை மிளகாய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் பயிர்ச் செய்கையாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நவீன விவசாய விரிவாக்கல் திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேசத்தில் 300ற்கு மேற்பட்டோர் மிளகாய் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது பச்சை மிளகாய் 60தொடக்கம் 70ரூபாய்க்கே கொள்வனவு செய்கின்ற நிலையில் தமது உற்பத்தி செலவையே ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுவதாக  விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தற்பொழுது பச்சை மிளகாயை அறுவடை செய்வதற்காக கிலோ ஒன்றுக்கு நாம் 30 ரூபாய் தொடக்கம் 40 ரூபாய் செலவு செய்வதாகவும், விற்பனை செய்யும் பொழுது 70 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் மூலம் கொள்வனவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

பச்சை மிளகாயினை உலரவிடுவதற்கான இயந்திர வசதிகள் இல்லாத காரணத்தினால் அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக நாளாந்தம் ஏற்படுகின்ற செலவினை கூட தம்மால் பெற முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மிளகாய் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply