• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மே 24 முதல் பி.டி பீரியட் ஆரம்பம்

சினிமா

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் ஹிப்ஹாப் ஆதி. இசையமைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய முதல் படமான மீசைய முறுக்கு படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்தும் இருந்தார். இப்படம் மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

அதைத்தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு மற்றும் வீரன் படத்தில் நடித்தார். தற்பொழுது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் பிடி சார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கார்த்திக் வேனுகோபாலன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இது இவர் இசையமைக்கும் 25-வது படமாகும். காஷ்மிரா, அனிகா சுரேந்திரன், பாண்டியராஜன், தியாகராஜன், முனிஸ்காந்த் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் இப்படத்திற்கு ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தில் விளையாட்டு ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் படத்தின் முதல் பாடல் வெளியாகியது. தற்பொழுது படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பள்ளிக் கூடத்தில் அன்பான பி.டி வாத்தியாராக நடித்துள்ளார் ஆதி. அதன்பிறகு அந்த பள்ளிக் கூடத்தில் சிறுமி பாலியல் ரீதியாக பாதிக்கப் படுகிறாள். அதை ஆதி தட்டி கேட்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. படம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
 

Leave a Reply