• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சஜித்தின் ஆடையை பார்த்து கிண்டல் செய்த சபாநாயகர்

இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்திற்கு செம்மஞ்சள் நிற ஆடை அணிந்து வந்த நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சஜித்தை கிண்டல் செய்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் நோக்கில் தாம் இந்த ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து வந்ததாக சஜித் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இன்றைய தினம் (25.11.2026) ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த நிலையில், இதன்போது “எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே நீங்கள் அழகாக ஆடை அணிந்து வந்திருக்கிறீர்கள்” என சபாநாயகர் கிண்டலாக குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறெனினும், பெண்கள் மீதும் சிறுவர்கள் மீது கொண்ட அன்பினால் இவ்வாறு ஆடை அணிந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் வயது குறைந்த சிறுமியர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாவதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் ஊழிய படையில் பெண்களுக்கான பங்களிப்பு மிகுந்த குறைந்த அளவில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்களை வலுவூட்டுவதற்கும் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்குவதற்கும் சிறுவர்கள் தலைமுறையினரை பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச இதன் போது வலியுறுத்தியுள்ளார். 
 

Leave a Reply