• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இஸ்ரேலிய இராணுவத்தில் 23 பேர் உயிர்மாய்ப்பு

இஸ்ரேலிய இராணுவத்தில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய இராணுவத்தில் இந்த ஆண்டு தன்னுயிரை மாய்த்;துக் கொண்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் போரின் போது, ​​வழக்கமான மற்றும் ரிசர்வ் படைகளில் பணியாற்றிய 17 வீரர்கள் இந்த ஆண்டு இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் தன்னுயிரை மாய்த்;துக் கொண்டுள்ளனர்.

மேலும் 2026ஆம் ஆண்டில் 5 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் பதிவான தற்கொலைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது என இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸை செய்தி வெளியிட்டுள்ளது.

2023 அக்டோபரில் காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினரிடையே தற்கொலைகள் அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. போருக்கு முந்தைய பத்தாண்டுகளில், இராணுவத்தில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 12 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

Leave a Reply