• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்சர்லாந்தில் போதுமான வருவாய் இல்லாமல் திணறும் 360,000 பணியாளர்கள்

இலங்கை

Income not enough for many Swiss households: சுவிட்சர்லாந்தில் போதுமான வருவாய் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் திணறிவருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் போதுமான வருவாய் இல்லாமல் லட்சக்கணக்கானவர்கள் திணறிவரும் நிலையில், அவர்கள் கூடுதல் சுமை ஒன்றை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

சுவிட்சர்லாந்தில், சுமார் 360,000 பணியாளர்கள் சம்பாதிக்கும் ஊதியம், அவர்களுடைய் குடும்பத்தின் தேவைகளை சந்திக்க போதுமானதாக இல்லை என சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று கூறுகிறது.

வேலை இருந்தும், ஏழ்மையில் வாடும் மக்கள் எண்ணிக்கை, 2014க்குப் பிறகு இந்த அளவுக்கு அதிகமாக இருந்ததில்லை என்று கூறும் Caritas என்னும் தொண்டு நிறுவனம், குடும்பங்கள் என்று மட்டும் பார்க்காமல், தனிநபர் கணக்கு எடுத்தால், 820,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது. 

இவர்களில், சுமார் பாதி பேர், அதாவது, 180,000 பேர், வறுமைக்கோட்டுக்கு சற்று மேல் இருப்பதால், அவர்களுக்கு அரசு உதவியும் கிடைப்பதில்லை.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக்கான பிரீமியம் அதிகரிக்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில், காப்பீட்டைப் பொருத்தவரை, per-capita premium system என்னும் நடைமுறை பயன்பாட்டில் உள்ளது.

அதாவது, ஒரு தனிநபர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதைப் பார்த்து, அதற்கேற்ப காப்பீடு பிரீமியத்தை நிர்ணயிக்காமல், அவர் ஏழையா, வசதியுள்ளவரா என்பதையெல்லாம் பார்க்காமல், பொதுவாக எல்லோருக்கும் ஒரே மாதிரியான பிரீமியம் வசூலிக்கப்படும்.

ஏற்கனவே இப்படி லட்சக்கணக்கானோர் போதுமான வருவாய் இல்லாமல் தவித்துவரும் நிலையில், இந்த காப்பீட்டு பிரீமியம் மேலும் அதிகரிக்க உள்ளதால், அவர்களுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமை ஏற்பட உள்ளது.

ஆகவே, அதற்கு எதிராக பிரேரணைகளை முன்வைக்க சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டுவருகின்றன.
 

Leave a Reply