கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம்
இலங்கை
கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) செவ்வாய்க்கிழமை கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்த நிலையில், அங்கு அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முன்னிலை சோசலிசக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவரைப் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்”, “அரசியல் படுகொலைகளுக்கு நீதி வழங்க வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தப்பட்டிருந்தன.
லலித் மற்றும் குகன் உள்ளிட்ட காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.























