யாழ்ப்பாண வழக்கு - கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலை
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் இணையவழி (Online) ஊடாக சாட்சியமளிப்பதற்காகவே அவர் நீதிமன்றத்தில்க முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றினார்.
இந் நிலையில் யாழ்ப்பாணம் பிரதான நீதவான் எஸ். லெனின் குமார் விடுத்த கட்டளைக்கு இணங்க, பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















