• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பான் அணு ஆயுத நாடாக மாறப்போகுது - அச்சத்தில் அலறும் சீனா

சீனாவும் ஜப்பானும் எதிரில் எதிரி நாடுகளாக பார்க்கப்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது .

இந்நிலையில் ஜப்பானிடம் 5500 அணு ஆயுதங்களை தயாரிக்க போதுமான 44.4 டன் புளுட்டோனியம் உள்ளதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளமை உலகில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை பயன்படுத்தினால் மிக குறுகிய காலத்திலேயே ஜப்பான் அணு ஆயுத நாடாக மாறிவிடும் என்றும் ஆபத்தான முறையில் தனது ராணுவத் திறனை ஜப்பான் விரிவுபடுத்தி வருவதாகவும் சீன ராணுவம் எச்சரித்துள்ளது.

அதேவேளை கடந்த சில வருடங்களாகவே உலகமெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கிறது. ஒருபக்கம் ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த சில வருடங்களாகவே போரிட்டு வருகிறது. ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் பேரழிவு ஏற்பட்டதுடன் பெருமளவான மக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம் இஸ்ரேல் தாக்கியதில் காசா நாடு உருகுலைந்து போனது. காசாவில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்ததுடன் பல்லாயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்..

ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என சொல்லி அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது போர் தொடுத்து ஒரு மாதம் கடந்த நிலையில் போரின் தீவிரம் குறையவில்லை.

இந்த போர் காரணமாக வளைகுடா நாடுகளிருந்து இருந்து கச்சா எண்ணெய் வருவது தடைப்பட்ட்டதால் உலக நாடுகள் பெரும் நெருக்கடியில் உள்ளன. இந்த நிலையில் ஜப்பானிடம் 5500 அணு ஆயுதங்களை தயாரிக்க போதுமான 44.4 டன் புளுட்டோனியம் உள்ளதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply