அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் வீட்டின் மீது தாக்குதல் - சின்னாபின்னமான உலகின் எதிர்பார்ப்பு
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே நேற்று 34 ஆவது நாளாக போர் நீடித்தது.
ஈரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல்கராஸி (வயது 81), அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நேற்றுமுன்தினம் தீவிரப்படுத்தின.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கமல்கராஸியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளார். தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான் மூத்த தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தொழிற்சாலைகள் மீது குறிமேலும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகேயுள்ள தொழிற்சாலைகளை குறி வைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று அதிதீவிர தாக்குதல்களை நடத்தின.
இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ மையங்களை குறி வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது






















