48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்
இலங்கை
ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
ரயில்வே பொது முகாமையாளரின் தன்னிச்சையான நிர்வாகம் என்று தாங்கள் விவரித்த நடவடிக்கைகளால் ரயில்வே சேவை நெருக்கடியில் சிக்கியுள்ளதாகவும், இதன் விளைவாகப் பயணிகளுக்குத் தொடர்ந்து சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
இச்சூழ்நிலை குறித்துக் கவலைகளை எழுப்பிய தொழிற்சங்க நிர்வாகிகள் ஒடுக்கப்படுவதாகக் கூறப்படுவதைக் கண்டித்து, இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இதற்கிணங்க, ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் இணைந்து, 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளன.






















