• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை – ரஷ்யா வர்த்தகம் விளாடிவோஸ்டாக் வழியாக விரிவடையக்கூடும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இலங்கை

தற்போதுள்ள விமான மற்றும் கடல்வழிப் பாதைகளைப் பயன்படுத்தி, விளாடிவோஸ்டாக் (Vladivostok) வழியாக ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இலங்கை விரிவுபடுத்த முடியும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஸ்புட்னிக் இந்தியாவிடம் பேசிய அமைச்சர், இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் வழித்தடங்களில் இலங்கை அமைந்துள்ள இடமும், அதன் வலுவான விமான இணைப்பு வசதியும் ரஷ்யாவுடனான விரைவான வர்த்தகத் தொடர்புகளுக்கு ஆதரவளிக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுடனான இலங்கையின் கடல்வழித் தொடர்புகளையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், விளாடிவோஸ்தோக் புவியியல் ரீதியாக இந்த வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

பிராந்திய தளவாட மையமாக ஹம்பாந்தோட்டா துறைமுகத்தின் வளர்ந்து வரும் திறனைக் குறிப்பிட்டு, வர்த்தகத்தை எளிதாக்குவதில் அதன் பங்கை அமைச்சர் எடுத்துரைத்தார்.

மேலும், ஒரு பரந்த யூரேசிய போக்குவரத்து கட்டமைப்பின் கீழ் கடல்வழி வர்த்தக இணைப்புகளை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள இந்த அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
 

Leave a Reply