பிரான்ஸ் பரிஸில் கத்தி குத்து தாக்குதல்
பிரான்ஸ் பரிஸில் உள்ள Arc de Triomphe அருகே நேற்று கத்தி ஏந்திய ஒருவர் ஜொண்டாமினரை தாக்க முயன்ற சம்பவம் நடைபெற்றது.
அணையாவிளக்கை மீள ஏற்றும் விழா நடைபெற்று கொண்டிருந்த வேளையில், மூன்று ஜொண்டாமினர் வீரர்கள் அங்கு பணியில் இருந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் உள்ள ஆர்க் டி ட்ரையம்பில் கத்தியுடன் இருந்த ஒருவர், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்க முயன்ற போது காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுடரை மீண்டும் ஏற்றும் விழாவின் போது இந்தத் தாக்குதல் நடந்தது. பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர் பின்னர் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
அங்கு இருந்த மற்றொரு ஜொண்டாமினர் துப்பாக்கி பயன்படுத்தி அந்த நபரை கட்டுப்படுத்திய நிலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். Parquet national antiterroriste விசாரணையை மேற்கொண்டுள்ளது.
நெப்போலியன் கால நினைவுச்சின்னம் பாரிஸின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாகும். இது பரபரப்பான சாம்ப்ஸ்-எலிசீஸ் அவென்யூவின் பிரதான சாலைகளை இணைக்கும் சந்தியில் அமைந்துள்ளது.























