• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சில இயக்குனர்கள் 2வது படத்திலேயே பெரிய லெவலுக்கு போய்விடுவார்கள். 

சினிமா

சில இயக்குனர்கள் 2வது படத்திலேயே பெரிய லெவலுக்கு போய்விடுவார்கள். அப்படி ரமணா திரைப்படம் மூலம் பெரிய இயக்குனராக மாறியவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். இவரின் முதல் படமான தீனா படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் அஜித்துக்கு சொன்ன கஜினி பட கதையை சூர்யாவை வைத்து எடுத்தார்.

சூர்யாவுக்கு அது முக்கியமான படமாக அமைந்ததோடு வெற்றிப்படமாகவும் அமைந்தது. மீண்டும் சூர்யாவை வைத்து ஏழாம் அறிவு எடுத்தார். அதேபோல், விஜயை வைத்து முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. மீண்டும் விஜயை வைத்து கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கினார்.

அதேபோல், தமிழில் ஹிட் அடித்த கஜினி படத்தை ஹிந்திக்கு சென்று அமீர்கானை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். ஆனால், ரஜினியை வைத்து அவர் இயக்கிய தர்பார் படம் வெற்றிப்படமாக அமையவில்லை. அதேபோல், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ஸ்பைடர் படமும் பாக்ஸ் ஆபிசில் ஊத்திக்கொண்டது.

கடந்த 4 வருடங்களாக முருகதாஸ் எந்த படத்தையும் இயக்கவில்லை. தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்ந்நிலயில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த முருகதாஸ் ஸ்பைடர் படம் ஏன் தோல்வி அடைந்தது என்பது பற்றி விளக்கமளித்திருக்கிறார். 

ஒவ்வொரு படம் பண்ணும் போதும் அது முதல் படம்தான். ஏனெனில் அந்த கதை புதிது. ஸ்பைடர் படம் துவங்கியபோது தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பேலன்ஸ் செய்ய வேண்டியிருந்தது. இப்போது போல அப்போது பேன் இண்டியா கான்செப்ட் வரவில்லை. தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுக்காகவும், தெலுங்கில் மகேஷ் பாபுவுக்காகவும் படம் பார்ப்பார்கள் என நினைத்தேன்.

தமிழில் மகேஷ் பாபுவை சூப்பர் ஹீரோவாக காட்ட முடியாது என்பதால் அண்டர்பிளே செய்ய வைத்தேன். ஆனால், தெலுங்கில் அது எடுபடவில்லை. தமிழ் இயக்குனர் என்பதால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மகேஷ்பாபுவை மட்டம் தட்டிவிட்டதாக நினைத்து விட்டனர்’ என முருகதாஸ் சொல்லி இருந்தார்.
 

Leave a Reply