• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாழ்க்கையில் கணவனும் மனைவியும் இரண்டு கண்கள் ...

சினிமா

உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி 
உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி.......
கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் உயர்வை பற்றி நடிகர் திலகம் #இல்லறம் என்ற தலைப்பில் ......
நான் பேச நினைப்பதெல்லாம் என்ற நூலில் எழுதியது.......
வாழ்க்கையில் கணவனும் மனைவியும் இரண்டு கண்கள் ...
கணவன் தான் மனைவியின் முதல் குழந்தை ......
வாழ்க்கை என்பது பிறப்புக்கும் இறப்புக்கும்  இடையில் இருக்கும் காலவெளி.....
 இன்பமான குடும்பம் தான் இங்கு நாம் காணுகின்ற சொர்க்கம்... அந்த இடைக்கால லட்சியம்  குடும்பம் மகிழ்வோடு இருக்க வேண்டும் என்பதுதான்.....
 எங்கள் வீட்டில் எல்லோரும் ஒன்றாகவே இருக்கிறோம் .என் தாத்தா காலத்தில் இருந்து இந்த பாரம்பரிய முறைதான் தனிக்குடித்தனம் என்பது எப்போதும் கிடையாது. எல்லோரும் ஒன்றாக இருக்கும் போது அந்த வீட்டின் மகிழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது...
 நான் மாலையில் வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து விடுவேன்...
 சினிமா டின்னர் என்று எதற்கும் போவது கிடையாது ....
மீதி பொழுதை என் குடும்பத்தினருடன் கழிப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி...
 டைனிங் டேபிள் முன் நான்  சகோதரர்கள் பிள்ளைகள் பெண்கள் பேரக் குழந்தைகள் மற்ற உறவினர் அமர்ந்து அவர்களிடம் உரையாடிக்கொண்டே சாப்பிடுவதே தனி இன்பம் ....
 அதை அனுபவித்தவர்களுக்குத்  தான் அதன் அருமை தெரியும்...
 கூட்டுக் குடும்பமாக இருப்பதில் பாசம் வளர்கிறது பண்பு வளர்கிறது என்னை பொறுத்தவரையில் இந்த பண்டைய முறை நாடு முழுவதும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்...
அன்பு கணவராக 
பிள்ளைகளுக்கு 
அன்பு தந்தையாக பேரக்குழந்தைகளுக்கு 
செல்ல தாத்தாவாக 
நண்பர்களுக்கு தோழனாக இருக்கிறேன்..............
நடிகர் திலகம் எழுதிய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற நூலின் இரண்டாம் பாகத்தில் இருந்து........
உங்களுக்காக G.லட்சுமணன், மதுரை
 

Leave a Reply