• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெளிவந்த 24 வருடங்களாகும் சேது படத்தின் மொத்த வசூல்.. 

சினிமா

சில திரைப்படங்கள் மட்டும் தான் காலம்கடந்து நம் மனதில் இருந்து நீங்கவே நீங்காது. அப்படி காலத்தால் அழிக்கமுடியாத தமிழ் திரைப்படங்களில் ஒன்று சேது.

அறிமுக இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்திருந்தனர். மேலும் சிவகுமார், அபிதா, ஸ்ரீமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

1999ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆர். ரத்னவேலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், இன்றுடன் சேது படம் வெளிவந்து 24 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சேது திரைப்படம் உலகளவில் ரூ. 13 முதல் ரூ. 15 கோடி வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply