• Welcome to TamilsGuide
செய்திகள் 1

20 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழைய அனுமதி - இந்தோனேசிய அரசாங்கத்தின் திட்டம் 

இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை அமைச்சகம் 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்க முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவுஸ்திரேலியா, இந்தியா, சீனா, தென்கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 20 நாடுகளுக்கு இந்தோனேயாவிற்குள் நுழைய விசா அற்ற அனுமதி வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் சாண்டியாகோ ஊனோ தெரியப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க முடியும், இதன் மூலம் பெரிய முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவார்கள், அதிக நாள் தங்கும் நோக்கில் வருபவர்களே எங்களது இலக்கு” எனக் கூறியுள்ளார்.
 

Leave a Reply