• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காஸா மக்களுக்காக ரூ 1107 கோடி நிதி திரட்டிய சவுதி அரேபியா

காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக சவுதி அரேபியா ரூ 1107 கோடி தொகையை திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 800,000 பேர்கள் காஸா மக்களுக்காக நிதியுதவி அளித்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மன்னர் சல்மானின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் இந்த நிதி திரட்டும் பணி முடுக்கிவிடப்பட்டது.
  
மேலும் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் இது தொடர்பில் பொதுமக்களிடம் கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

மட்டுமின்றி, 12,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் மரணத்திற்கு காரணமான இஸ்ரேல் குண்டுவீச்சைத் தொடர்ந்து காஸா பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல அழுத்தமான மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றே கூறப்படுகிறது.

முன்னதாக காஸா பகுதி மக்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி பட்டினியை எதிர்கொள்ளும் கடும் நெருக்கடியான சூழலில் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டிருந்தது.

இஸ்ரேல் இராணுவத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து உணவு, தண்ணீர், எரிபொருள் மற்றும் பிற பொருட்களின் பற்றாக்குறை காஸா பகுதியில் மோசமாகி வருகிறது என்றே தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply