• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சஞ்சய் விஜயுடன் காதல்? - மௌனம் கலைத்த ரவீனா தாஹா

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல் சினிமா என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரவீனா தாஹா ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடிச்சதன் மூலம் பெருவாரியான ரசிகர்களால் அறியப்பட்டார். அதன் பிறகு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான இவர் தற்போது தமிழ் பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.  

இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயை நடிகை ரவீனா காதலித்து வருவதாகவும் அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ரவீனா தாஹாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, பதில் அளித்த நடிகை ரவீனா தாஹா ஆமாம் எனக்கும் அந்த தகவல்களை என்னுடைய நண்பர்கள் அனுப்பி வைத்தார்கள். அதை பார்த்ததும் என்ன கொடுமை இது..? என்று எனக்கு ஆகிவிட்டது.

நான் என்ன கூறினேன் என்றால்.. நான் நடிகர் விஜயின் தீவிரமான ரசிகை அவருக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.

ஆனால் அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றால் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் கண்டிப்பாக ஹீரோயினாக நடிக்க வேண்டும். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருந்தேன்.

ஆனால் இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் நான் ஜேசன் சஞ்சய் காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங் சென்று வருவதாகவும் தகவலை பரப்பி விட்டார்கள் என்று இந்த விவகாரம் குறித்து தன்னுடைய மௌனத்தை கலைத்து விளக்கத்தை கொடுத்து இந்த ஒட்டுமொத்த விவகாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 

Leave a Reply