• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள SLPP தயாராகவே உள்ளது

இலங்கை

”ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ என எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது” என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவித்துள்ளார்.

நாட்டில் முதலாவதாக ஜனாதிபதித் தேர்தலே நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஜனாதிபதி தேர்தலோ அல்லது பொதுத்தேர்தலோ என எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகவே உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கிராமமட்டத்தில் இருந்து நாம் ஆரம்பித்துள்ளோம்.

எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிபெறும். மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவரையே நாம் வேட்பாளராக அறிவிப்போம். நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சியும் எவ்வாறான வாக்குறுதிகளை வழங்கினாலும் பொதுஜன பெரமுன மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்றும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. ஜனாதிபதியுடனும் கலந்துரையாடிவருகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply