• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் மதுபானசாலைக்கு எதிராகத் திரண்ட மக்கள்

இலங்கை

மன்னார், நானாட்டான் நகர பகுதிக்குள் எந்த ஒரு மது பானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், பொது மக்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஊர்வலமாக சென்றிருந்த இவர்கள், மக்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் காணப்படும் மதுபான சாலைகள் மற்றும் கள்ளுத் தவறனைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்கான மகஜர் ஒன்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் சிவசம்பு கனகம்பிகையிடம் கையளிக்கப்பட்டது.

Leave a Reply