• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐ.நாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு  - வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் அனுர உறுதி

இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் – என்ட்ரே பிரேஞ்சுக்கும் (Marc-André Franche) தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் நடப்பு மனித உரிமைகளின் நிலைமை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க செயன்முறை பற்றி இரு தரப்புக்கும் இடையில் விரிவாக கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.

அதேநேரம், இலங்கையில் நல்லிணக்க செயன்முறையை உன்னிப்பாக அவதானிப்பதாக சுட்டிக்காட்டிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் எதிர்வரும் தேர்தல் செயன்முறைக்குள் அரசியல் கட்சிகளால் பின்பற்றபட வேண்டிய நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது தமது அரசியல் கலாசாரமானது ஆரம்பத்தில் இருந்தே ஒழுக்கநெறிக் கோவையை அடிப்படையாகக் கொண்டிருந்து என்பதை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply