• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அந்நியன் - தெலுங்கில் 17-ஆம் தேதி ரீ-ரிலீஸ்

சினிமா

கடந்த 2005-ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் அந்நியன். இதில் பிரபல நடிகர் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் நடித்தனர். இப்படம் நகைச்சுவை, காதல், அதிரடி த்ரில்லர் படமாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலை குவித்தது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் சார்பில் தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார்.

இப்படம் ஓர் அப்பாவியான அம்பி சமூகத்தில் அன்றாட மக்கள் எதிர்கொள்ளும் சட்டத்திற்கு புறமான நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து போராடுபவர். இதனால் அனைவரும் இவரை இகழ்ந்து கேலி, கிண்டகள் செய்து "ரூல்ஸ் ராமானுஜம்" என அழைத்தனர்.

இவரது தொடர்ச்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இவருக்குள் "அந்நியன்" என்னும் ஒரு ஆக்ரோசமான குணாதியசம் கொண்டுள்ள பிரமை ஒன்று உருவாகிறது. இவரால் சமாளிக்க முடியாத நேரங்களில் அந்த அந்நியன் இவருக்குள் இருந்து வெளிவந்து போராடுகிறார்.

சமுதாயத்தில் பணபலம் மற்றும் அதிகார பலத்தினால் தவறுகளை செய்து வரும் சில குற்றவாளிகளை அந்நியனாக மாறி கருட புராணத்தின் படி தண்டனைகளை அளித்து வருகிறார், அம்பி. இதனை காவல்துறை அதிகாரியான பிரகாஷ்ராஜ் மற்றும் சாரி (விவேக்) கொலைகளை பற்றி புலனாய்வு செய்து வருவார்கள்

அம்பி ஒருதலையாக நந்தினியை (சதா) விரும்புகின்றார். எனினும் ஒரே சட்டம் சட்டம் என்று பேசும் அம்பியின் மனதளவில் வெறுக்கும் சதா, இவரை பிடிக்கவில்லை என அவமானப்படுத்த, இவருக்குள் மீண்டும் ரெமோ என்னும் ஒரு புதிய குணம் தோன்றுவது தான படத்தின் கதை.

இந்நிலையில் தற்போது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுகின்றன.இதே போன்று விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக 'அபராஜிதடு' (அந்நியன்) என்ற பெயரில் இப்படம் வருகிற மே 17- ந்தேதி தெலுங்கில் 'ரீ ரிலீஸ்' செய்யப்பட இருக்கிறது.

இப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் இதனை 'ரீ ரிலீஸ்' செய்கிறார்.
 

Leave a Reply