• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைனுக்கு உதவி - ஜேர்மன் சேன்ஸலர் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

AfD co-leader Alice Weidel Calls For Merz Exit Over Debt, Ukraine Spending: ஜேர்மனியின் AfD கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆலிஸ் வீடல், நாட்டின் கடன் பிரச்சினை, உக்ரைன் விவகாரம் ஆகியவற்றை காரணம் காட்டி மெர்ஸ் பதவி விலக அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனியில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள், உக்ரைனுக்கு ஜேர்மன் அரசு உதவி செய்வது தொடர்பில் ஜேர்மன் மக்களுக்கு விருப்பம் குறைந்துவருவதைக் காட்டுகின்றன.

இந்நிலையில், அதே விடயத்தை சுட்டிக் காட்டி, ஜேர்மன் சேன்ஸலர் பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜேர்மனியில் வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆலிஸ் வீடல், ஜேர்மனியின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே செல்வதாகத் தெரிவித்துள்ளார். 

இப்படி நாட்டில் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், ஜேர்மன் அரசோ வெளிநாடுகளுக்கு நிதி உதவி செய்துகொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் ஆலிஸ்.

வரி செலுத்தும் ஜேர்மன் மக்களுக்கோ, ஓய்வு பெற்றவர்களுக்கோ முன்னுரிமை கொடுக்காமல், ஜேர்மன் அரசு, உக்ரைனுக்கு நிதி உதவி செய்துகொண்டிருப்பதாகவும், பிரேசில் மழைக்காடுகள் திட்டத்துக்கு நிதி ஒதுக்க இருப்பதாகவும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார் ஆலிஸ். 

இப்படி எங்கெங்கோ உள்ள யார் யாருக்கெல்லாமோ நிதி வழங்குவதை ஜேர்மனி அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஆலிஸ், சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் முன்கூட்டியே பதவி விலகவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
 

Leave a Reply