• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமைச்சர் வசந்த சமரசிங்க பங்கேற்பில் திருநகர் வட்டார சபை உருவாக்கம்

இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பங்கேற்புடன் திருநகர் வட்டார சபை உருவாக்கும் நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநகர் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் , அப்பகுதிக்கான வட்டார சபை உருவாக்கப்பட்டது.

அதேவேளை , அப்பகுதியில் , யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார தொழிலாளிகள் பலர் வசித்து வரும் நிலையில் ,  மாநகர சபையின் ஆளும் கட்சியினரால் குறித்த நிகழ்வுக்கு போக கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டதாக ,  மாநகர சபையின் , தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சு.கபிலன் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply