பிராம்ப்டனில் வணிகக் கட்டிடத்தில் பெரும் தீ விபத்து
கனடா
கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள வணிகக் கட்டிடம் ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட பயங்கரத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஹம்பர்வெஸ்ட் மற்றும் வில்லியம்ஸ் பூங்காச் சாலைகளுக்கு அருகே உள்ள 70 வார்ட் ரோடில் அமைந்துள்ள கட்டிடத்தில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பிராம்ப்டன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த தீ விபத:து காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலும் இதுவரையில் எவ்வித தகவல்களும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






















