• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரிய நிதி மோசடி - தனியார் நிறுவன ஊழியர் கைது

இலங்கை

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 30 வயதுடைய ஊழியர் ஒருவர், 59.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர், நிறுவனத்தின் கணினித் தரவுத்தளத்தில் போலியான தகவல்களைப் பதிவேற்றி, வங்கி கணக்குகள் ஊடாக 59,656,496.84 ரூபாயைத் மோசடியாகப் பெற்றுக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குற்றவியல் ரீதியாகப் பணத்தைச் சட்டவிரோதமாகக் கையாண்டமை மற்றும் நம்பிக்கையை மீறியமை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவு (4) இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக, கட்டுநாயக்க பிரிவைச் சேர்ந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (30) காலை சந்தேகநபரை கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த நிதி மோசடி இடம்பெற்ற சூழல் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 

Leave a Reply