• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனியார் எரிபொருள் நிலையங்களிலும் விலை உயர்வு

இலங்கை

சினோபெக் (Sinopec) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விற்பனை செய்யப்படும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 495 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (Lanka IOC) ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையை லீற்றருக்கு 20 ரூபாவால் அதிகரித்திருந்தது.

இதன்படி, லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 475 ரூபாவிலிருந்து 495 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைத் திருத்தம் நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply