அநுரவுக்கு ரணில் வழங்கியுள்ள அறிவுரை
இலங்கை
இந்தியப் பெருங்கடலில் தடையற்ற மற்றும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதே இலங்கையின் முதன்மையான மற்றும் மிக முக்கியமான முன்னுரிமையாகும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
புவிசார் அரசியல் வரைபடவியலாளர் அமைப்பின் விசேட நிகழ்வு தனியார் ஹோட்டல் ஒன்றில் அண்மையில் இடம்பெற்றது.
இதன்போது அவர் தனது உரையில், ”பண்டைய காலத்தில் நளந்தா பல்கலைக்கழகம் முதல் இலங்கையின் மகாவிகாரை மற்றும் அபயகிரி வரை நிலவிய அறிவு, மதம் மற்றும் அமைதிசார் தூதரக உறவுகள் இந்தியப் பெருங்கடலின் மென்சக்தியாக விளங்கின.
மேலும், இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் சூழல் தொடர்ந்து மாற்றமடைந்து வருவதால், எந்தவொரு தனிப்பட்ட உலகப் பேரரசாலும் அல்லது கடற்படையாலும் முழுமையான ஆதிக்கத்தை இங்கு நிலைநாட்ட முடியாது.
இந்தோ-பசிபிக் என்ற கருத்துருவத்திலிருந்து விலகி, இந்தியப் பெருங்கடல் தனது சொந்த வலிமையுடன் தனித்து நிற்கும் காலம் உருவாகியுள்ளது.
இவ்வாறானதொரு புவிசார் அரசியல் சூழலில், பிராந்திய அமைதியைப் பேண கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பு (Colombo Security Conclave) இலங்கைக்கு மிகவும் அவசியமானது” என சுட்டிக்காட்டினார்.






















