காணாமல் போன பதுளை மருத்துவமனை மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
இலங்கை
காணாமல் போனதாகக் கூறப்பட்ட பதுளை மருத்துவமனை மருத்துவரின் உடல், மஹியங்கனையின் மபாகடவேவ பகுதிக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை போதனா மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (23) காலை பணியில் இருந்த நிலையில், அதன் பின்னர் காணாமல் போயுள்ளார்.
விசாரணையின் போது, மருத்துவரின் கார் மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் மஹியங்கனையை நோக்கிச் செல்வது பதிவாகியுள்ளதும் கண்டறியப்பட்டது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், பதுளை-மஹியங்கனை கால்வாய் சாலையில் உள்ள 17வது கனுவ மபாகடவேவ பகுதியில் மருத்துவரின் கார் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, காணாமல் போன மருத்துவரைத் தேடுவதற்காக இன்று (24) அப்பகுதியில் பொலிஸார் , குற்ற நிகழ்வு அதிகாரிகள் மற்றும் இராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் அவரது உடல் அங்கு கண்டெடுக்கப்பட்டது.






















