வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சாணக்கியன் எம்.பி
இலங்கை
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் , நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு, போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு தமது முழுமையான ஆதரவை தெரிவித்தனர்.






















