துபாயில் அதிரடியாகத் தொடங்கும் Scene பட புரமோஷன் நிகழ்ச்சி
சினிமா
'ரோமாஞ்சம்', 'ஆவேசம்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் அக்டோபர் 25-ஆம் தேதி, துபாயில் உள்ள புகழ்பெற்ற 'சிலிக்கான் சென்ட்ரல் மால்' வளாகத்தில் மாலை 6:00 மணி முதல் #SceneLiveInDubai என்ற பெயரில் படத்தின் பிரம்மாண்ட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் படத்தின் டீசர், ட்ரைலர் அல்லது 3-வது சிங்கிள் பாடல் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்பதால் சூர்யா ரசிகர்களும், சினிமா பிரியர்களும் தற்போதே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கியுள்ளனர்.
பிரம்மாண்ட பான்-இந்திய படமாகத் திட்டமிடப்பட்டுள்ள ‘சீன்’ திரைப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சூர்யா, ஜோதிகா மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நஸ்ரியா கூட்டணியில், ஜித்து மாதவனின் கலகலப்பான திரைக்கதையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரசிகர்களுக்கு ஒரு செம ஆக்ஷன்-காமெடி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















