• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்த ஆண்டில் 1.45 மில்லியனை விஞ்சிய சுற்றுலாப் பயணிகளின் வருகை

இலங்கை

2026 ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்து, ஆகஸ்ட் நடுப்பகுதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.45 மில்லியனைக் கடந்துள்ளது.

இதன்படி, ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 18 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,468,980 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில், ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 18 வரையிலான காலத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,25,562 என்றும் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில், இந்தியாவிலிருந்து வந்தவர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்; இவர்களின் மொத்த எண்ணிக்கை 27,884 ஆகும்.

இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்தனர்; இவர்களின் எண்ணிக்கை 13,980 ஆகப் பதிவாகியுள்ளது.

பிரான்ஸிலிருந்து மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்; இவர்களின் மொத்த எண்ணிக்கை 8,776 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 144,381 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 97,073 சுற்றுலாப் பயணிகளும் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, இவ்வருடத்தில் இதுவரை பதிவான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் bgப்ரவரி மாதமே அதிகபட்ச எண்ணிக்கையைக் கொண்டிருந்தது; அந்த எண்ணிக்கை 279,328 ஆகும்.
 

Leave a Reply