மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை
நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (05) அதிகாலை தன்னிச்சையாக திறந்துள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு நீர் வெளியேற்றும் கதவிலிருந்தும் வினாடிக்கு 30 கன மீட்டர் நீர் கொத்மலை ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது எனவும் தெரிவித்தனர்
தொடர்ச்சியாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை தொடருமானால் எஞ்சிய வான் கதவுகளும் தன்னிச்சையாக திறக்கப்படும் என்பதால் நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அனரத்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.






















