• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை விஜயம்

இலங்கை

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய வெளியுறவுச் செயலாளரை வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதோடு, ஏனைய அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயமானது, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், ஏற்கனவே நடைபெற்று வரும் உயர்மட்டத் தொடர்புகளை மேம்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply