• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் நகைக் கடையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது

கனடா

கனடாவின் ஒஷாவா வணிக மையத்தில் இடம்பெற்ற நகைக் கடை கொள்ளை சம்பவம் தொடர்பான புதிய காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அந்த வீடியோவில், ஒரு வாடிக்கையாளர் சந்தேகநபரை கட்டுப்படுத்த முயன்று கழுத்தைப் பற்றியபடி பிடித்துக் கொண்டிருப்பது காணப்படுகிறது.

மேலும் மற்றொரு காணொளியில், இன்னொரு சந்தேகநபரை வணிக மையத்தில் இருந்த பொதுமக்கள் கட்டுப்படுத்தி பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதும் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 3.45 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதமாகக் கருதப்படும் கடினமான கருவிகளுடன் நால்வர் நகைக் கடைக்குள் நுழைந்து காட்சிப்பெட்டிகளை உடைத்து கொள்ளையடித்ததாக டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கடையில் பணியாற்றிய ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீயணைப்பு படையினரும் காற்றோட்ட வசதி ஏற்படுத்த உதவினர். தப்பிச் செல்ல முயன்ற சந்தேகநபர்களில் இருவரை வணிக மைய பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பிடித்தனர். மீதமுள்ளவர்கள் ஐந்தாவது நபர் ஓட்டிய வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

பின்னர் அருகில் சிறிய விபத்தில் சிக்கிய அவர்கள் வாகனத்தை விட்டுத் தப்பிச் செல்ல முயன்றபோதும், போலீசார் துரத்திச் சென்று இறுதியில் அனைவரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் பொதுமக்கள் தலையீடு செய்தது குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளில் தலையிட வேண்டாம்; உங்கள் பாதுகாப்பே முதன்மை” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
 

Leave a Reply