• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரீயூனியன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி

சினிமா

தமிழ்த் திரைப்படங்களில் முக்கியத் துணை வேடங்களில் நடித்து பிரபலமானவர் அருள்தாஸ். தற்போது இவரது நடிப்பில் 'ரீயூனியன்' படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் அருள்தாஸ் நடித்துள்ளார். அகில் சந்தோஷும் நடிக்கும் இப்படத்தை சத்ஸ் ரெக்ஸ் இயக்கியுள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இப்படத்தில் அருள்தாஸ், அகில் சந்தோஷ் தவிர, ஜெயக்குமார், அனுபமா குமார், பர்வீன், சுப்ரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், கராத்தே ராஜா, பூவையார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 'ரீயூனியன்' திரைப்படம் தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது. இதன் வெளியீட்டுத் தேதியைத் தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

சமீபத்தில் ராதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘தாய் கிழவி’யில் அருள்தாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply