• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொதுஜன பெரமுன வழியின்றித் தடுமாறுகின்றது - வசந்த யாப்பா பண்டார

இலங்கை

எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து, ஜக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார இவ்வாறு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிமரசிங்கவினால் அமைச்சராக நியமிக்கப்பட்ட பொதுஜனவின் உறுப்பினர்கள் தற்போது பதவியை இழக்கும் நிலையில் உள்ளனர்.

அதனால் அந்த குழுவினர் எப்படியாவது, யாருடனாவது இணைந்து நாடாளுமன்றத்தில் தமக்கான ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கட்சியிலுள்ள சிலரினால் நாடாளுமன்றத்திற்கு செல்லமுடியுமே தவிர அவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியாது.

அவர்களுக்கு கடந்த காலத்தில் 5 வருடங்கள் சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோதும் அதனை சில மாதங்களுக்கு கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.

அவ்வாறான கூட்டத்துக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பதனால் மட்டும் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப்போவதில்லை.

கடந்த காலங்களில் நாட்டை மீட்டெடுத்த ஒரே ஒரு தலைவர் ரணில் விக்கிமசிங்க என கூறிக் கொண்ருந்த பொதுஜன பெரமுன, தற்போது, நாட்டை காற்றமுடியாத ஒரே எதிரி ரணில் விக்கிமசிங்க என கூறுகின்றனர்.

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து எவ்வாறு பிரிந்து செல்வது என்று தெரியாமல் பொதுஜன பெரமுன என்ற கொள்ளை கூட்டம் தடுமாறிக் கொண்டிருக்கிறது” என வசந்த யாப்பா பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply