• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடிப்படைச் சம்பளத்தை வலியுறுத்தி புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

இலங்கை

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி புறக்கோட்டை, ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தோர், மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தலையில் கருப்பு துணியை அணிந்தவாறு தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர்.

மேலும், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேச்சு வார்த்தைக்கு, முதலாளிமார் சம்மேளனத்தினர் வருகைத் தராதமைக்கும் இதன்போது கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பெருமளவான தொழிலாளர்களும், இ.தொ.காவின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாயை வழங்குமாறு அரசாங்கம் கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளடன், அமைச்சரவையிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், பெருந்தோட்டக் கம்பனிகள் 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்க முடியாதென தொடர்ச்சியாக கூறிவருவதுடன், அரசாங்கத்தின் தீர்மானத்தையும் நிராகரித்து வருகின்றன.

இதுதொடர்பாக தொழில் அமைச்சு, முதலாளிமார் சம்மேளனம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ{க்கு இடையில் நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுகளும் தோல்வியிலேயே முடிந்தன.

இவற்றுக்கு எதிர்ப்பினை வெளியிட்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply