• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1.3 மில்லியன் அமெரிக்கர்களை ஏமாற்றிய கனேடியர்

கனேடியர் ஒருவருக்கு அமெரிக்க சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் பல தசாப்தங்களாக நடந்த மோசடி வழக்கில், கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை இந்த வார தொடக்கத்தில் விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதான Patrice Runner என்ற நபர், 1994 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், 1.3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களிடம் இருந்து சுமார் 17.5 கோடி($175 மில்லியன்) அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்றுள்ளார்.
 
மாண்ட்ரியல் நகரத்தைச் சேர்ந்த முன்னாள் குடியிருப்பாளரான Patrice Runner கனடாவில் உள்ள தனது நிறுவனம் மூலம் இந்த மோசடியை நடத்தியுள்ளார்.

அமெரிக்க நீதித்துறை அறிக்கையின்படி, கடிதங்கள் மூலம் அமெரிக்கர்களை இலக்கு வைத்து, பணம் செலுத்தினால் திறமையான ஜோதிடர்கள் மூலம் செல்வமும் மகிழ்ச்சியும் கிடைக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.

உண்மையில் எந்த ஜோதிடர்களும் இதில் ஈடுபடவில்லை என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். ஆரம்ப கடிதத்திற்கு பணம் செலுத்தியவர்களுக்கு, மேலும் சேவைகள் மற்றும் பொருட்களை வாங்க அழுத்தம் கொடுக்கும் கடிதங்கள் தொடர்ந்து வந்து சேர்ந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் மத்திய நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு Runner இன் மோசடி திட்டம் அம்பலப்பட்டது.

அவர் அஞ்சல் மற்றும் மோசடி(wire fraud) உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.

வாரத்திற்கு சராசரியாக 7,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை Runner மோசடி செய்துள்ளதாக வழக்குத் தொடுத்தவர் குற்றம் சாட்டினர். 
 

Leave a Reply