• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இதுவரை பாரதிராஜா உடன் இணையாத 3 ஜாம்பவான்கள்

சினிமா

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, இயக்குனர் இமயம் பாரதிராஜா ஆவார். நடிக்கும் ஆசையோடு வந்து ,16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. இன்று வரை பல முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் ஆசானாக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவிற்கு பல திறமையான நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தமது படங்களில் மண்வாசனையுடன் கலந்த கிராமத்து கதைகளில் தமிழ் கலாச்சாரத்தை முன்னுறுத்தி ரசிகர்களை கொண்டாட செய்தார். இப்படிபட்ட இயக்குனர் இமயம் தமிழ் சினிமாவில் பயன்படுத்த தவறிய மூன்று ஜாம்பவான்களை காணலாம்.
  
ஜெய்சங்கர்: 70ஸ் 80ஸ் காலகட்டங்களில் காதல், ஆக்சன், காமெடி, திரில்லர் என பல வகையிலும் கலக்கி கொண்டிருந்த ஜெய்சங்கரால், பாரதிராஜாவின் படங்களில் நடிக்க முடியாமல் போனது.

ஜெய்சங்கரின் போஸ்டரை பார்த்து, நான் ஏன் நடிக்க கூடாது என்று தன் சக தோழர்களிடம் கேட்டுக் கொண்டாராம். இதை ஒரு பேட்டி ஒன்றில் பதிவு செய்துள்ளார் பாரதிராஜா.

ஜெமினி கணேசன்: சிவாஜியின் படங்களை பார்த்தே தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்ட பாரதிராஜாவிற்கு சிவாஜியை வைத்து முதல் மரியாதை திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தன் வாழ்நாள் பெருமையாகவே கருதினார் பாரதிராஜா.

ஆனால் பத்மஸ்ரீ விருது வென்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து இருந்த ஜெமினி கணேசன் அவர்களுக்கு பாரதிராஜாவின் கிராமத்து கதைகளிலும், திரில்லர் ஸ்டோரிகளிலும் ஒன்ற இயலாமல் போனது.

நாசர்: 80ஸ் காலகட்டங்களில் இருந்து இன்று வரை வயதை ஒரு பொருட்டாக கருதாமல் இளம் நடிகர்களுடன் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நாசர்.

தனக்கென கொடுக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரத்தை உள்வாங்கி, தன்னால் அந்த கதாபாத்திரத்திற்கே பெருமை ஏற்படும்படி சிறந்த நடிப்பினை வழங்குபவர் தான் நாசர்.

ரேவதி, ஊர்வசி,ரோகிணி நடித்த மகளிர் மட்டும் என்ற திரைப்படத்தில் ஆணாதிக்க மேனேஜராக பெண்களால் மூக்கன் என்று கேலி செய்யப்பட்டிருந்தார் நாசர். திரைக்கதைக்காக எதையும் சமரசம் செய்து கொள்ளும் நாசர் போன்ற கலைஞன் தமிழ் சினிமாவின் வரப் பிரசாதமே.

எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் சக நடிகர்களுடன் இயல்பாக பழகும் நாசர் அவர்கள் இயக்குனர் இமயத்தின் படங்களில் நடித்ததில்லை. இந்த கூட்டணி இணையாதது தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட இழப்புதான்.

வயது என்பது எண்ணிக்கை மட்டும்தான் என்று நிரூபித்து இன்றைய தலைமுறையினருடன் ஒரு குணசித்திர நடிகனாக, “ கள்வன், திருச்சிற்றம்பலம், நம்ம வீட்டு பிள்ளை” என கலக்கிக் கொண்டுதான் இருக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. 
 

Leave a Reply