• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கம்போசிங் ரூமில் இயக்குனருடன் மோதல்... கடைசி வரை பாடல் எழுதாத கண்ணதாசன்  - யார் அந்த இயக்குனர்?

சினிமா

இயக்குனருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடைசி வரை அவர் தயாரித்த படத்தற்கு கண்ணதாசன் பாடல் எழுதவில்லை.

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் கவியரசர் கண்ணதாசன், இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர் தயாரித்து இயக்கிய ஒரு படத்தில் கூட பாடல்கள் எழுதவில்லை என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

வசதியான குடும்பத்தை சேர்ந்த, .இயக்குனர் ஏ.சி.திரிலோகச்சந்தர் அந்த காலத்திலேயே எம்.ஏ படித்துவிட்டு சினிமாவுக்கு வந்துள்ளார். அதேபோல் புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்த இவர், படப்பிடிப்புக்கு இடைவெளியில் புத்தகம் படிப்பது, பாடல் கம்போசிங்கில் படிப்பது, என எப்போதும் கையில் புத்தகத்துடனே அலைந்துகொண்டிருப்பாராம். இதனால் கண்ணதாசனுக்கும் இவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.

நான் படத்தின் சூழலுக்கு தகுந்த மாதிரியும் டியூனுக்கு தகுந்த மாதிரியும், பாடலை யோசித்து சொல்லிக்கொண்டிருக்கும்போது, நீ புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்று கண்ணதாசன் சத்தம்போட்டுள்ளார். இவர்களுக்கு இடையில் எழுந்த இந்த மோதல் காரணமாகத்தான் கண்ணதாசன் ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கிய தாயாரித்த படங்களுக்கு கண்ணதாசன் ஒரு பாடல் கூட எழுதவில்லை. அதே சமயம் மற்ற நிறுவனங்களில் திரிலோகச்சந்தர் இயக்கிய படங்களுக்கு கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார்.

அந்த வகையில், 1975-ம் ஆண்டு வெளியாக அவன்தான் மனிதன் படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, மஞ்சுளா, சந்திரபாபு, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1971-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கஸ்தூரி நிவாசா என்ப படத்தை தான் அவன்தான் மனிதன் என்று தமிழில் ரீமேக் செய்துள்ளனர். ஏ.சி.திரிலோகச்சந்தர் படத்தை இயக்கியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியுள்ளார். ஒருநாள் பாடல் கம்போசிங்கின்போது, எம்.எஸ்.வி ஒரு டியூனை வாசிக்க, ரொம்ப அருமையாக இருக்கிறது. இயக்குனர் இந்த டியூனை வேண்டாம் என்று சொல்லிவிட்டால், இந்த டியூன் வேறு படத்திற்கு பயன்படுத்தும்போது அதற்கு நான் தான் பாடல் எழுதுவேன் என்று கண்ணதாசன் கண்டிஷன் போட எம்.எஸ்.வியும் ஓகே என்று கூறியுள்ளார். ஆனால் இந்த டியூனை கேட்ட ஏ.சி.திரிலோகச்சந்தர் நல்லாருக்கு என்று சொல்லிவிட்டார்.

அதன்பிறகு டியூனுக்கு பாடலை கண்ணதாசன் எழுதியுள்ளார். இந்த பாடலை டியூனுடன் சேர்த்து எம்.எஸ்.வி வாசிக்க, அங்கிருந்த அனைவரும் சூப்பராக இருக்கிறது என்று சொல்ல, ஏ.சி.திரிலோகச்சந்தர் அங்கு புத்தகம் படித்துக்கொண்டு இருந்துள்ளார். அதன்பிறகு அவரிடம் பாடல் எப்படி இருந்தது என்று கேட்க, மீண்டும் பாடுமாறு கூறியுள்ளார். அதைதொடர்ந்து எம்.எஸ்.வி மீண்டும் பாட, சிறிது நேரம் யோசித்த திரிலோகசந்தர் ஓகே என்று கூறியுள்ளார்.

அந்த பாடல் தான் ‘’அன்பு நடமாடும் கலைக்கூடமே’’ என்ற பாடல். இந்த பாடலில் அது என்ன அன்பு நடமாடும் என்று திரிலோகச்சந்தர் சந்தேகம் கேட்க, நாயகன் காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் வீல் சேரில் வருவதால், அவனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வரிகள் என்று கண்ணதாசன் விளக்க, அதன்பிறகு சரி என்று கூறியுள்ளார்.
 

Leave a Reply